கருப்பு கவுனி அரிசி / KARUPPU KAVUNI RICE
கருப்பு கவுனி அரிசியை தற்போது ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்து வருகின்றனர். இந்த அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்களும், நன்மைகளும் உள்ளது. இந்த அரிசி பண்டைய சீனாவைப் பூர்விகமாகக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது.
இதை சீன மன்னர்கள், அமைச்சர்கள், செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் எனும் வேதி மூலக்கூறு தான் கருப்பு நிறமாக இருப்பதற்குக் காரணம் ஆகும்.
To know more about Valentine's Day wishes in Tamil
புற்றுநோய் கருப்பு கவுனி அரிசியில் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும், மார்பக புற்றுநோய் செல்களை குறைக்கக் கூடியதாகவும் உள்ளது.
அழற்சி கருப்பு கவுனி அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் அழற்சி குணமாகும். நாள்பட்ட அழற்சியால் அவதிப்படுபவர்கள் கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, வேகமாகக் குறைய வாய்ப்புள்ளது.
உடல் பருமன் கருப்பு கவுனி அரிசியில் அதிகளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைப்பதோடு, எடையும் குறைக்கும்.
கல்லீரல் நச்சு கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை குறைப்பதற்குக் கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. கல்லீரல் கொழுப்பு நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதனால் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க கருப்பு கவுனி அரிசியைச் சாப்பிட்டு வரும் போது, கொழுப்பு அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.
ஆஸ்துமா கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், மூச்சுக்குழாயில் உள்ள நீர்க்கோவை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது.
இதனால் ஆஸ்துமா வராமலும் தடுக்கும். தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி அரிசியை விளைவித்து விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment