பிரபல 'டான்சர்' ரமேஷ் பிறந்த நாளில் இறந்த சோகம்


சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் பகுதி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; சமூக வலைதள பிரபலமாக இருந்தார். இவரது முதல் மனைவி சித்ரா, 42. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக இரண்டாவது மனைவி இன்பவல்லி, 41, என்பவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், பிறந்த நாளான நேற்று குடியிருப்பின் 10வது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார்.

CLICK HERE TO EDIT YOUR PHOTO FOR TNPSC APPLICATION - TNPSC PHOTO COMPRESSOR 

இது குறித்து, பேசின்பாலம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஆறு மாதத்திற்கு முன், 'இன்பவல்லியுடன் வாழ விருப்பம் இல்லை' என, போலீசில் எழுதி கொடுத்து, முதல் மனைவி சித்ராவுடன் சென்றார்.
பின், மீண்டும் இன்பவல்லியின் வீட்டுக்கு வந்து செல்ல துவங்கினார். நேற்று அவருக்கு, 42வது பிறந்த நாள். அதை கொண்டாட, மாலையில் இன்பவல்லியின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, மது குடிக்க இன்பவல்லியிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் மறுக்கவே, 'மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன்' என விளையாட்டாக மிரட்டியிருக்கிறார். 
ஆனால், நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து இன்பவல்லி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்கின்றனர்.
ரமேஷ், தனியார் 'டிவி' நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடனமாடி வந்தார். சமீபத்தில் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடனமாடி இருந்தார்.

Comments

Popular posts from this blog

MEETING REGARDING TNPSC GROUP 2 MAIN EXAM 2023: குளறுபடிகள் நிறைந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு? - மறுதேர்வு மட்டுமே நியாயமான தீர்வு

கருப்பு கவுனி அரிசி / KARUPPU KAVUNI RICE