பெண்களின் ஃபேவரைட் ஒன் பீஸ் கவுன்கள் / WOMENS ONE PIECE GOWN

பெண்களின் ஃபேவரைட் ஒன் பீஸ் கவுன்கள் / WOMENS ONE PIECE GOWN


பெண்களின் ஃபேவரைட் ஒன் பீஸ் கவுன்கள் / WOMENS ONE PIECE GOWN: பேஷன் ட்ரெண்ட் என்பதே ஒரு சுழற்சி தானே. 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இருந்ததோ அதுதான் சிறிய மாற்றங்களுடன் புது பேஷனாக மீண்டும் வருகிறது.

அந்த வரிசையில் 70, 80களில் பிரபலமாக இருந்த ஒன் பீஸ் கவுன்கள் தற்போது இளம்பெண்களின் ஃபேவரைட் ஐட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது பார்ப்பதற்கு சிம்பிளாகவும், அதேநேரம் ரிச்சாகவும் காட்டுவதே இதற்கு காரணம். 

பார்ட்டி, கெட் டு கெதர், அவுட்டிங், ஜாலி ஷாப்பிங் என எங்கு சென்றாலும் இந்த ஒன் பீஸ் கவுன் மாடல் டரெஸ், சார்மிங் க்யூட் லுக் தருவதுடன், கம்ஃபர்டபிளாகவும் இருக்கும்.

பெண்களின் ஃபேவரைட் ஒன் பீஸ் கவுன்களின் மாடல்களை இங்கே காணலாம். முன்பகுதியில் ஃப்ரில்கள் இந்த ஒன் பீஸ் கவுன் ட்ரெஸ், ஹாப்ஃ லெங்த் மற்றும் ஃபுல் லெங்த்திலும் கிடைக்கும்.

முன்பக்கத்தில் ஃப்ரில்களுடன் இருக்கும் இதற்கு துப்பட்டா அணிய தேவையில்லை. விருப்பப்பட்டால் ஸ்டோல் அணிந்து கொள்ளலாம்.பெல்ட் கவுன் இந்த ஒன் பீஸ் கவுன், மெல்லிய பெல்ட் உடன் சேர்ந்து வரும். 

பெல்ட்டுடன் அணிந்தால் டீசண்ட் லுக் தரும். கிராண்ட் ஆக உடை அணிய விரும்பாதவர்கள் இந்த கவுனை அணிந்து கொள்ளலாம். கவுன் வித் காலர் அண்ட் பெல்ட் ஓபன் காலர் நெக் மற்றும் கவுனுடன் இணைக்கப்பட்ட பெல்ட், ஷார்ட் ஸ்லீவுடன் உள்ளது.

நண்பர்களுடன் ஷாப்பிங் செய்ய கிளம்பினால், இது சரியான தேர்வாக இருக்கும்.லாங் ஃப்ளோயி கவுன் நீளமாக பாதம்வரை தரைதொட்டு இருக்கும் இந்த ஒன் பீஸ் கவுன்கள், பார்ட்டி மற்றும் ஸ்பெஷல் அக்கேஷன்களுக்கு சிறப்பாக இருக்கும். 

ஸ்லீவ்லெஸ், முக்கால் கை, ஷார்ட் ஸ்லீவ் என நமக்கு விருப்பமான ஸ்டைல்களில் அணிந்து கொள்ளலாம். ஆனால் ஸ்லீவ்லெஸ் கைகள் தான் இந்த வகை கவுன்களுக்கு எடுப்பாக இருக்கும்.

மெட்டர்னிட்டி ஒன் பீஸ் கவுன் இந்த ஒன் பீஸ் கவுன்கள், புது தாய்மார்களுக்கும் கிடைக்கிறது. ஃபீடிங் செய்யும் தாய்மார்களின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகிறது. டிராவல், வெகுநேரம் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் இந்த உடை அணிந்து கலந்து கொண்டால் அழகாகவும், கம்போர்டாகவும் இருக்கும்.

Comments

Popular posts from this blog

MEETING REGARDING TNPSC GROUP 2 MAIN EXAM 2023: குளறுபடிகள் நிறைந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு? - மறுதேர்வு மட்டுமே நியாயமான தீர்வு

பிரபல 'டான்சர்' ரமேஷ் பிறந்த நாளில் இறந்த சோகம்

கருப்பு கவுனி அரிசி / KARUPPU KAVUNI RICE