MEETING REGARDING TNPSC GROUP 2 MAIN EXAM 2023: குளறுபடிகள் நிறைந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு? - மறுதேர்வு மட்டுமே நியாயமான தீர்வு

என்னவாயிற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு? போட்டித் தேர்வுகளை நடத்துவதில் யுபிஎஸ்சிக்கு இணையான நிபுணத்துவம் - குரூப்-4 தேர்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்களை திறம்படக் கையாண்ட அனுபவம் என டிஎன்பிஎஸ்சியின் கடந்த கால செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்துள்ளன. ஆனால், முதல்முறையாக தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஆணையம் சறுக்கியுள்ளது. பொதுவாக, குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாளுடன் சேர்ந்தே இருக்கும். காலையில் நடந்த தமிழ்த் தாள் என்பது தகுதித் தேர்வு மட்டுமே. இதில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பொதுத் தாள் மதிப்பீட்டுக்கு பரிசீலிக்க முடியும். ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதால், பெரும்பாலானோருக்கு இந்த தாள் எளிதாகவே இருந்தது. அடுத்ததாக, பொதுத் தாள். இதில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மாநில அரசின் 'கொள்கை சார் திட்டங்கள்' பற்றிய வினாக்கள் சற்று கூடுதலாகவே தெரிந்தன. TO KNOW MORE ABOUT - BHARATHIDASAN HISTORY IN TAMIL என்னதான் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு என்றாலும், மாநிலஅரசின் விருப்பத்துக்க